News August 9, 2024
திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்

தமிழகம் முழுவதும் 2 ஆம் சனிக்கிழமையான நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் இன்று உத்தரவிட்டார். ஆனால், திருவள்ளூரில் ஆடிக்கிருத்திகையை ஒட்டி கடந்த 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை முழு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், நாளை பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்கள் அனைத்தும் இயங்கும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 15, 2025
ஆவடி: சொந்த வீடு இருக்கா? உடனே பண்ணுங்க

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2025-26ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான ஏப்ரல் 2025 முதல் செப்.2025 வரை சொத்து வரியை செலுத்துவதற்கான கடைசி நாள் செப்.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் வரியை செலுத்த தவறினால், அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. (ஷேர் பண்ணுங்க)
News September 15, 2025
ஆவடி அருகே மனைவியை கொன்ற கணவன் தற்கொலை

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவரது மனைவி ஷீலா. சரண்ராஜிக்கு மனைவியின் நடத்தியைில் சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டத்தில் சரண்ராஜ், கத்தியால் ஷீலா-வை குத்தியதில் உயிரிழந்தார். இதனையடுத்து சரண்ராஜ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News September 15, 2025
திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

நாடு முழுதும் வரும் அக்.20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் https://www.inesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் கலெக்டர் மு. பிரதாப் அறிவித்துள்ளார். மேலும் உரிய அனுமதி பெறாமல் பட்டாசு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.