News April 24, 2025

திருவள்ளூரில் கிராம சபை கூட்டம் அறிப்பு

image

திருவள்ளூர் மாவட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2025 அன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டம்நடைபெற உள்ளது. இதில் கிராமம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்கு மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள வேலை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும். இக்கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News December 23, 2025

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

image

திருவள்ளுர்: தகுதி வாய்ந்த 2,90,000 கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் எட்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் (டிச.29) முதல் (ஜன.28) வரை அனைத்து கிராமங்களிலும் நடைபெறவுள்ளது. எனவே முகாம் நடைபெறும் நாளன்று கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்தார்.

News December 23, 2025

திருவள்ளூர் மக்களே சொந்த வீடு கட்ட ஆசையா?

image

சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய 500 ஆண்டுகள் பழைமையான கோயில் ஆகும். இந்த முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை உகந்த நாளாக விளங்குகின்றது. இங்கு வரும் பக்தர்கள் நிலம், வீடு, மனை என பூமி சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் இங்கு வந்து முருகப்பெருமானை மனமுருகி வணங்கி சென்றால் உடனே நிறைவேறிவிடும் என்று ஆணித்தரமாக நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க.

News December 23, 2025

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

திருவள்ளுர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் (டிச.30) அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அனைத்து விவசாயப் பெருமக்களும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காண இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

error: Content is protected !!