News November 23, 2024
திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாகவும், நவம்பர் 25 முதல் 28 ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வரும் 27-ஆம் தேதி திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம்,ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 19, 2025
திருவள்ளூர்: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News September 19, 2025
திருவள்ளூர்: மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் மூதாட்டி பலி

ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் குரு வயல் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சம்மந்தன். இவரது மனைவி மல்லிகா(60). இருவரும் தங்களது விவசாய நிலத்தில் சுற்றிப் பார்வையிட்டு நேற்று (செப்டம்பர் 18) மாலை வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மாலை கனமழை பெய்து மின்னல் தாக்கியதில் மூதாட்டி மல்லிகா சம்பவ இடத்திலேயே அதிர்ச்சியில் பலியானார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 19, 2025
திருவள்ளூர்: பருவமழைக்கு முன்பே நிரம்பும் ஏரிகள்…!

திருவள்ளூர், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே, புழல் ஏரி நிரம்பும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை பணிகளில் நீர்வளத்துறையினர் சுணக்கமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இது, 3.30 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. தற்போது, புழல் ஏரியில், 2.99 டி.எம்.சி., அளவிற்கு நீர் இருப்பு உள்ளது.