News July 22, 2024

திருவள்ளூரில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆடி கிருத்திகை விழாவானது வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நாளில் அறுபடை வீடுகளில் மிக விமரிசையாக வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News August 13, 2025

FLASH: திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

திருவள்ளூர், அவரச எண் 100 மூலம் பேசிய மர்ம நபர் ஒருவர் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தகவல் அறிந்து வந்த வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News August 13, 2025

திருவள்ளூரில் இன்று கரண்ட் கட்!

image

பொன்னேரி & துரைநல்லூர் துணைமின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 13) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. திருமழிசை, சிட்கோ தொழிற்பேட்டை, குத்தம்பாக்கம், நேமம், குண்டுமேடு, உடையார்கோயில், பிராயம்பத்து, கொத்தியம்பாக்கம், பாரிவாக்கம், சோம்பட்டு, பணப்பாக்கம், துரைநல்லூர், ராளம்பாடி &அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்!

News August 13, 2025

திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

image

திருவள்ளூர் மாவட்டத்தில், மழைக்காலம் தொடங்கிவிட்டதால், நீர்நிலைகளில் குழந்தைகள் குளிப்பதையோ, விளையாடுவதையோ தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. நீர்நிலைகளின் அருகில் குழந்தைகளை தனியே விட வேண்டாம் எனவும், பாதுகாப்பில் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!