News August 3, 2024
திருவள்ளூரில் இரவு மழை பெய்யும்

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
திருவள்ளூர் இன்று இரவு ரோந்து அதிகாரிகளின் விபரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (5.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News November 5, 2025
திருவள்ளூரில் நுகர்வோர் சிறப்பு குறைதீர் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் அனைத்து வட்டங்களிலும் நவம்பர் எட்டாம் தேதி இரண்டாவது சனிக்கிழமை உணவுப் பொருள் பழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கான சிறப்பு குறை தீர்வு கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் கைரேகை பதிவுகளை சரிபார்த்தல் திருத்தங்களை உரிய ஆவணத்துடன் சரி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மு பிரதாப் அறிவித்தார்.
News November 5, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (05.11.2025) பொதுமக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.குறைகள் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.


