News August 27, 2024

திருவள்ளூரில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

image

திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சி, நசரத் பேட்டை ஊராட்சி, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களூர் டிரங்க் ரோடு, செம்பரம்பாக்கத்தின் ஒரு பகுதி, திருமழிசையின் ஒரு பகுதி, அம்பத்தூர், மலயாயம்பாக்கம், அகரம்மேல் பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Similar News

News January 1, 2026

திருவள்ளூரில் இன்று மழை வெளுக்கும்!

image

இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையின் ஒரு சில பகுதியில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று திருவள்ளூரில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழையா என கமெண்டில் சொல்லுங்க.

News December 31, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிச.31) இரவு 10 மணி முதல் நாளை (ஜன.01) காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 31, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் 14 சதவீதம் அதிக மழை

image

வடகிழக்கு பருவமழை அக்.01ஆம் தேதி முதல் முதல் இன்று டிசம்பர் 31 ஆம் தேதி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 623.9 மி.மீ., இருக்கும் நிலையில் 712.8 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 14 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது.

error: Content is protected !!