News August 9, 2024

திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 23, 2025

திருவள்ளூர்: கடன் தொல்லையால் தற்கொலை!

image

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள பாலயோகி நகரில் வசித்து வந்தவர் சிவரஞ்சன்(44). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த நவ.24ஆம் தேதி கடன் தொல்லையால் வீட்டில் இருந்து மாயமான அவர், பெருமாஞ்சேரி பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அழுகிய நிலையில் அவரின் உடலைக் கண்டெடுத்த போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 23, 2025

திருவள்ளூர்: அண்ணியை கொலை செய்த வாலிபர் கைது!

image

இருளஞ்சேரி கிராமம், கலைஞர் நகரைச் சேர்ந்த இசைமேகன் என்பவர், நேற்று முன் தினம் திருமணமாகி 3 மாதத்திலேயே கர்ப்பமான தனது மனைவியை கிண்டல் செய்ததற்காக தனது அண்ணியை கத்தியால் சராமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில், அவரது அண்ணி சாந்தி உயிரிழந்தார். இந்நிலையில், தலைமறைவான இசைமேகனை நேற்று(டிச.22) மப்பேடு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 23, 2025

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிச.22) இரவு 10 மணி முதல் நாளை (டிச.23) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!