News April 13, 2025
திருவள்ளூரில் இன்று இயற்கை வேளாண் சந்தை

திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பின் பேரில், இன்று திருவள்ளூர் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் சந்தை துவங்கவுள்ளது. காய்கறி, பழம், மரச்செக்கு எண்ணெய், பாரம்பரிய அரிசி, தேன், பனை வெல்லம் உள்ளிட்டவை குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இச்சந்தை, ஒவ்வொரு மாதத்தின் 2வது ஞாயிறு காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 8, 2026
திருவள்ளூர் இரவு நேர ரோந்து பணி விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜன.08) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்போது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.மக்களுக்காக இரவு நேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News January 8, 2026
மாநில அளவில் பதக்கம் வென்ற கும்மிடிப்பூண்டி மாணவர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் சேர்ந்த நகிலேஷ் 14,17, 19 வயதுக்குட்பட்ட பாரதியார் தின, குடியரசு தின புதிய விளையாட்டு போட்டிகளில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற ஜூனியர் சிலம்பாட்டத்தில் பல சுற்றுகளின் முடிவில் வெற்றி பெற்றுவெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவரை பாராட்டும் வகையில் கிராமத்தினர் பேனர் வைத்து வெற்றியை கொண்டாடினர்.
News January 8, 2026
திருவள்ளூர்: ரேஷன் பொருட்கள் வாங்குவதில் பிரச்னையா?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.


