News August 8, 2024

திருவள்ளூரில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 12, 2026

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!

image

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஏடிஎம் அறையில் வைக்கப்பட்ட கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

News March 12, 2026

மணவாளநகரில் டைட்டல் பார்க்! – எம்.எல்.ஏ

image

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வாய்ப்பு தரப்பட்டால், மப்பேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் நிறைவுப் பணி, மாம்பழ விவசாயிகளுக்கு குளிரூட்டும் தளம்(Mango freezer zone), மணவாளநகரில் டைட்டல் பார்க் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படுமென எம்.எல்.ஏ வி.ஜே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதில், எந்தத் திட்டம் உடனடி தேவை? தேர்தலில் யாருக்கு வாய்ப்பு அளிக்கலாம்? என உங்களது கருத்துகளை கீழே கமெண்ட் பண்ணுங்க!

News March 12, 2026

திருவள்ளூரில் ரூ.5,000 வேண்டுமா..?

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

error: Content is protected !!