News August 8, 2024
திருவள்ளூரில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 22, 2025
திருவள்ளூர்: புகாருக்கு What’s App பண்ணுங்க

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களைத் தெரிவிப்பதற்கான உதவி எண்களை கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார். தொலைபேசி எண் 044 27664177/ 044 27666746, வாட்ஸ்அப் எண்கள் 9444317862 மற்றும் 9498901077
எண்கள் மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் புகார்களை அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.
News October 22, 2025
திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவள்ளூரில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையிற்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News October 22, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.