News August 10, 2024

திருவள்ளூரில் இடியுடன் மழை

image

திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஈக்காடு, காக்களூர், மணவாளநகர், திருப்பாச்சூர் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் திருத்தணி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்திலும் மழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்து வருகிறது.

Similar News

News January 10, 2026

திருவள்ளூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா..?

image

திருவள்ளூர் மக்களே.., ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும்.( SHARE NOW)

News January 10, 2026

திருவள்ளூரில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

image

திருவள்ளூர் மாவட்டம் அடுத்த டோல்கேட்டில் இன்று(ஜன.10) தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்ற கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வட்டார பணியாளர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

News January 10, 2026

திருவள்ளூருக்கு மெட்ரோ ரயில் வந்தாச்சு!

image

திருவள்ளூர்: பூந்தமல்லி – போரூர் இடையே உள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 10 கி.மீ தூரத்திற்கு ரயிலை இயக்குவதற்கான தற்காலிக பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் தற்போது வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி – போரூர் இடையே விரைவில் மெட்ரோ ரயில் சேவை பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!