News August 26, 2024

திருவள்ளூரின் வேடந்தாங்கல் பழவேற்காடு ஏரி

image

புலிகாட் ஏரி என அறியப்படும் பழவேற்காடு ஏரி, இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி ஆகும். இது சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கழிமுகப்பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது. பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகத்திற்கு, அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும், ஆயிரகணக்கான புலம்பெயர் பறவைகள் வருகின்றன. சுற்றுலா தலத்திற்கும் பெயர் போன இடமாக பழவேற்காடு ஏரி உள்ளது .

Similar News

News October 20, 2025

திருவள்ளூர்: வீட்டில் செல்வம் பெருக உகுந்த நாள்

image

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், கடன் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க.

News October 20, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் (19.10.2025) இன்று இரவு ரோந்து பார்க்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக பொதுமக்களுக்கு எளிதான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தவொரு அவசர நிலையும், குற்றச்செய்திகளையும் நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இது மாவட்ட பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் காவல்துறை நடவடிக்கை.

News October 19, 2025

BREAKING ஆவடி அருகே வெடி விபத்து: 4 பேர் பலி

image

ஆவடியில் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் திருநின்றவூரைச் சேர்ந்த யாசின், சுனில் ஆகிய 2 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பேர் பட்டாசு வாங்க வந்தவர்கள் என தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டள்ளனர். இவ்வெடி விபத்தில் வீடு முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

error: Content is protected !!