News June 27, 2024

திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

image

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 18ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (ஜூன் 27) நடந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, துணைவேந்தர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 18, 2025

வேலூர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

News December 18, 2025

வேலூர் வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

வேலூர் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க.. 1.) <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும். 2.) உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க

News December 18, 2025

வேலூர்: ரயில் சேவைகளில் மாற்றம்

image

வடகிழக்கு ரயில்வே கோரக்பூர் மண்டலத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளால் வேலூர், காட்பாடி, திருவண்ணாமலை வழியாக செல்லும் 3 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி புரூலியா–திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் 22ம் தேதி ஒரு மணி நேரமும், புதுச்சேரி–ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 24ம் தேதி 60 நிமிடமும், விழுப்புரம்–கோரக்பூர் எக்ஸ்பிரஸ் 23ம் தேதி 240 நிமிடமும் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!