News January 14, 2025
திருவள்ளுவர் தினம் -புதுச்சேரி முதல்வர் வாழ்த்து
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகிற்கு தந்த தெய்வப் புலவர் வள்ளுவர் பிறந்த இந்நாளில், அவர் காட்டிய நன்னெறிகளை நெஞ்சில் நிறுத்தி எந்நாளும் கடைபிடிப்போம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 15, 2025
புதுவை: திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தெய்வப்புலவர் திருவள்ளுவர் தின விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று (15.01.2025) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம், R, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
News January 15, 2025
வெளிநாட்டு பார்சல் – ரூ.5.80 லட்சம் மோசடி
புதுச்சேரி திலாஸ்பேட்டையை சேர்ந்த மேரி ஜூலி. இவரை தொடர்பு கொண்ட மர்மநபர், சென்னை ஏர்போர்ட் சுங்கவரி அதிகாரி பேசுவதாக கூறி, தங்களுடைய பேரில் வெளிநாட்டில் இருந்து 70 ஆயிரம் டாலர் மதிப்பிலான பார்சல் வந்துள்ளது.அந்த பார்சலை பெறுவதற்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார். இதைநம்பிய மேரி ஜூலி ரூ.5.80 லட்சத்தை செலுத்தி ஏமாந்துள்ளார். அவர் நேற்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்
News January 15, 2025
பல்கலையில் மர்ம நபர்கள் அத்துமீறல்
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தேசிய பொறுப்பாளர் கிருத்திகா நேற்று லாஸ்பேட்டையில் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலையில் அத்துமீறி நுழைந்த 4 நபர்கள் அங்கு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த முதலாமாண்டு மாணவியிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் பாலியல் தொல்லை தர முயன்றுள்ளனர். இதுகுறித்து பெண் ஐ.பி.எஸ் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த கோரிக்கை வைத்தார்.