News December 31, 2024
திருவள்ளுவர் தமிழ் மக்களின் அடையாளம் – CM

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2-ம் நாள் நிகழ்ச்சி இன்று (டிச.31) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் போது, திருவள்ளுவர் சிலைக்கு ஏன் விழா என்று கேட்டார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. திருவள்ளுவர் தமிழ் மக்களின் அடையாளம், திருக்குறள் தமிழர்களின் அடையாளம். அதனால் இந்த விழா கொண்டாடப்படுகிறது கொண்டாடுவோம் என்றார்.
Similar News
News November 28, 2025
குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.3ம் தேதி (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார்.
News November 28, 2025
குமரி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

குமரி மாவட்ட மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)
News November 28, 2025
குமரி: உங்கள் பெயர் நீங்கிவிடும்.. கடைசி வாய்ப்பு

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை சுமார் 65 ஆயிரம் விண்ணப்பங்கள் திரும்ப வழங்கப்படாமல் இருப்பதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். படிவங்களை திரும்ப வழங்க நவம்பர் 30 கடைசி நாளாகும். இல்லையெனில் 2026 வாக்காளர் பட்டியலில் இருந்து திரும்பி வழங்காத வாக்காளர் பெயர்கள் தானாக நீங்கிவிடும் என தெரிவித்துள்ளார்.


