News June 27, 2024
திருவள்ளுவர் சிலையில் லேசர் ஒலி ஒளி வசதி

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க லேசர் ஒலி, ஒளி காட்சி கூடப்பணி ரூ.12 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஒரே நேரத்தில் 200 பேர் இந்த காட்சி கூடத்தில் அமர்ந்து ஒலி ஒளி காட்சிகளை காணலாம். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 9, 2025
குமரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவருக்கு சிறை

நாகர்கோவில் சகாய நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (56) இவர் கடைக்கு சென்ற 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த மகிளா நீதிபதி தனசேகரன், செல்வராஜுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
News December 9, 2025
குமரி: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

குமரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 9, 2025
குமரி: ரூ.100 கோடி சுருட்டல்? போஸ்டர்களால் பரபரப்பு

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஜெயசுதர்ஷன் நியமிக்கப்பட்டு அவர் கட்சிப் பணி ஆற்றி வருகிறார். இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் போலி சான்றிதழ் தயாரித்து வழங்கிய வகையில் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதர்ஷன் 100 கோடி ரூபாய் சுருட்டியதாக சமூக நீதி மாணவர் பேரவை என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், குமரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.


