News April 14, 2024
திருவண்ணாமலை: 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, மின்கம்பத்தில் மோதி, அரசுப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் – ஏம்பலம் செல்லும் வழியில் இன்று மதியம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த வயலில் தலைகீழாக கவிழந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News November 14, 2025
தி.மலை: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க

தி.மலை மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் தி.மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04175-232619) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்
News November 14, 2025
தி.மலையில் நாளை எங்கெல்லாம் கரண்ட் கட்?

திருவண்ணாமலையை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (நவ.15) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை நடைபெறவுள்ளது. இதனால் ஊசாம்பாடி, வேங்கிக்கால், நம்மியந்தல், வள்ளிவாகை, நொச்சிமலை, வட ஆண்டாப்பட்டு, சடையனோடை சேரியந்தல், வட அரசம்பட்டு, கீழ் நாச்சிபட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (நவ.15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News November 14, 2025
தி.மலை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


