News August 9, 2024

திருவண்ணாமலை மாவட்ட மழை நிலவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் நேற்று வியாழக்கிழமை வரை அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 26 மி.மீ.மழை பதிவானது. திருவண்ணாமலையில் 14.5, செங்கத்தில் 6.8, போளூரில் 10, ஜமுனாமரத்தூரில் 2, கலசப்பாக்கத்தில் 16, ஆரணியில் 10.6, செய்யாற்றில் 12, வந்தவாசியில் 10.3, கீழ்பென்னாத்தூரில் 12.4, சேத்துப்பட்டில் ஒரு மில்லி மீட்டா் மழை பதிவானது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Similar News

News November 16, 2025

தி.மலை: வெடிகுண்டு வெடித்ததில் சிறுவன் படுகாயம்!

image

செங்கம், மேல் நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (10) தாயுடன் கால்நடை மேய்ச்சலுக்கு நேற்று சென்றுள்ளார். அப்போது, காட்டுப்பன்றி வேட்டைக்காக மர்ம நபர்கள் வீசி சென்ற நாட்டு வெடிகுண்டை சிறுவன் எடுத்து பார்த்தபோது, குண்டு வெடித்ததில் உதட்டில் காயம் ஏற்பட்டது. சிறுவனுக்கு தி-மலை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜிப்மருக்கு மாற்றப்பட்டார்.

News November 16, 2025

தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் (15.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 15, 2025

நாளை வாக்குச்சாவடி மையங்களில் உதவி மையம் செயல்படும்

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர முறைத் திருத்தம் 2025 தொடர்பாக, படிவம் பூர்த்தி செய்யவும் சந்தேகங்களை தெளிவுபடுத்தவும் 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!