News March 27, 2024
திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் மனுதாக்கல்

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் கலெக்டரும் தலைவரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியனிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் பாஜக மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், பாமக மாவட்ட செயலாளர்கள் பக்தவச்சலம், இல.பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Similar News
News September 16, 2025
தி.மலையில் உள்ளவர்களுக்கு குட் நியூஸ்!

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News September 16, 2025
554 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்க பரிந்துரை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி குழு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், அண்ணாமலையார் கோயில் மலையில் உள்ள 554 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பரிந்துரைத்தது.
News September 15, 2025
பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், இன்று (15.09.2025) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 24 நபர்களுக்கு பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.