News April 14, 2024
திருவண்ணாமலை: சீமான் தேர்தல் பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பாக்கியலட்சுமி ஆதரித்து அவருக்கு ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தில் வாக்களிக்க கோரி சேத்பட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், ஏராளமான கட்சிக்காரர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News July 9, 2025
அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அனுமதி

தி.மலைக்கு ஜூலை 10ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்படுள்ளது. அறிவிப்பின்படி 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொண்ட பெற்றோர்கள் அம்மணி அம்மன் கோபுர வழியாக நேரடியாக நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
News July 9, 2025
தி.மலையில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு!

மாற்றுத்திறனாளிகளின் குறித்த விவரங்களை சேகரிக்க வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியை ஜூலை 10 முதல் முன் களப்பணியாளர்கள் மேற்கொள்ள உள்ளனர். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்களை முன்களப் பணியாளர்கள் சேகரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
News July 9, 2025
வெற்றி நிச்சயம் திட்டத்திற்கு தேவையான தகுதிகள் (2/2)

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்.