News April 4, 2025
திருவண்ணாமலை கோவிலில் எஸ்.வி.சேகர் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று சாமி தரிசனம் செய்து, விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் வழிபாடு செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு வழங்கப்பட்டது. பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி, 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என சூளுரைத்தார்.
Similar News
News December 6, 2025
தி.மலை: மது விற்ற 2 பெண்கள் கைது!

வந்தவாசி அருகே தொள்ளார் பகுதியில் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையில் ரோந்து பணி நேற்று நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் லைலா என்பவர் வீட்டில் மதுபாட்டில்கள் இருந்த நிலையில் அவரை கைது செய்தனர். மேலும் கோட்டை காலனி பகுதியை சார்ந்த அமுல்ராணி என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனி மது விற்றால் கைது செய்வோம் என்று அறிவுத்தினர்.
News December 6, 2025
தி.மலை: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

கீழ்பென்னாத்தூர் வட்டம் மங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று (டிச.06) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை மங்கலம், நூக்காம்பாடி, எரும்பூண்டி, கொத்தந்தவாடி, மணிமங்கலம், பாலந்தல், இராந்தம், ஆர்ப்பாக்கம், வேடந்தவாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 6, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (டிச.5) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


