News April 16, 2025
திருவண்ணாமலை: ஓதுவார் பயிற்சி பெற நல்ல வாய்ப்பு

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சிப்பள்ளி நடைபெறுகிறது. இதற்கு, 13-24 வயதிற்குட்பட்ட 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்துக்கள் விண்ணப்பிக்கலாம். இலவச உணவு, உறைவிடம், மாதம் ரூ.4,000 வழங்கப்படும். விருப்பமுள்ளோர் <
Similar News
News December 6, 2025
தி.மலை: Whats App மூலம் ஆதார் அட்டை!

திருவண்ணாமலை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (+91 9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 6, 2025
தி.மலை: தீபம் ஏற்றிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

வந்தவாசியை அடுத்த சளுக்கையை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் பாண்டியன் மனைவி ஸ்ரீமதி கடந்த 3-ம் தேதி தீபத் திருவிழாவிற்காக வீட்டில் அகல் விளக்கு ஏற்றினார். அப்போது, அருகே வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேன் மீது அவரது கால்பட்டு, கொட்டிய பெட்ரோலில் தீப்பிடித்து அவரது சேலையில் பற்றியது. அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீமதி உயிரிழந்தார்.
News December 6, 2025
தி.மலை: மது விற்ற 2 பெண்கள் கைது!

வந்தவாசி அருகே தொள்ளார் பகுதியில் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையில் ரோந்து பணி நேற்று நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் லைலா என்பவர் வீட்டில் மதுபாட்டில்கள் இருந்த நிலையில் அவரை கைது செய்தனர். மேலும் கோட்டை காலனி பகுதியை சார்ந்த அமுல்ராணி என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனி மது விற்றால் கைது செய்வோம் என்று அறிவுத்தினர்.


