News August 7, 2024
திருவண்ணாமலை அருகே நாளை மின்தடை

ஆரணி அடுத்த தச்சூர் 110/33 kv துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை காலை 9 மணி முதல் 2.00 மணி வரை தச்சூர், அரையாளம்,விண்ணமங்கலம், கோனையூர் , நடுப்பட்டு,தெள்ளூர், ரந்தம் , ஆகாரம், மேல் சீசமங்கலம்,நாராயணாமங்கலம், திருமணி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார் .
Similar News
News December 7, 2025
தி.மலை: கன்டெய்னர் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து!

கோவையில் இருந்து சென்னை நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்தவாசி வழியாக சென்று கொண்டிருந்தது. வந்தவாசி -மேல்மருவத்தூர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரின் மீது மோதி சாலை ஓரத்தில் கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் டிரைவர் பாலாஜி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
News December 7, 2025
திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள்!

திருவண்ணாமலையில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 30 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிப்பறை ,சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தூய்மைப் பணிக்காக 2000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, சுமார் 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. மாவட்ட ஆட்சியர் க. தர்மராஜ் தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டன.
News December 7, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (டிச.6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


