News September 14, 2024
திருவண்ணாமலை அருகே கோவில் சுற்றுச்சுவர் அகற்றம்

திருவண்ணாமலையில் தண்டராம்பட்டு-மணலூா்பேட்டை சாலையில், நான்கு வழிச்சாலை பணிக்காக 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலின் சுற்றுச்சுவா் அகற்றப்பட்டது. கோயிலின் ஒரு பக்க சுற்றுச்சுவா், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. இதற்கு சில பக்தர்கள் எதிா்ப்புத் தெரிவித்தனர். பின்னர், நெடுஞ்சாலை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினர்.
Similar News
News July 11, 2025
கிரிவலம் சென்ற தெலங்கானா பக்தா் கொலை: இருவா் கைது

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தெலங்கானாவை சேர்ந்த வித்தியாசாகா்(32) என்பவர் (ஜூலை.07) அன்று கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு, அவரிடம் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்தசம்பவத்தில், தி.மலைச் சோ்ந்த குகனேஸ்வரன்(21), தமிழரசன்(25) ஆகியோரை போலீஸாா் நேற்று (ஜூலை.10) இரவு கைது செய்தனா். மேலும், கிரிவலம் சென்ற பக்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம், பக்தர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
News July 11, 2025
தி.மலை- ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு ரயில்

தி.மலையிலிருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூரிற்கு நேற்று (ஜூலை 10) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. இது ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆந்திர பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நிலையில், தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த ரயிலால் தி.மலை, திருப்பதி, காளஹஸ்தி செல்லும் பக்தர்கள் பயனடைவர். *திருப்பதி, காளஹஸ்தி செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு பகிரவும்*
News July 11, 2025
தி.மலை- ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு ரயில்

திருவண்ணாமலையிலிருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூரிற்கு நேற்று (ஜூலை 10) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. இது ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆந்திர பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நிலையில், தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.