News September 14, 2024
திருவண்ணாமலை அருகே கோவில் சுற்றுச்சுவர் அகற்றம்

திருவண்ணாமலையில் தண்டராம்பட்டு-மணலூா்பேட்டை சாலையில், நான்கு வழிச்சாலை பணிக்காக 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலின் சுற்றுச்சுவா் அகற்றப்பட்டது. கோயிலின் ஒரு பக்க சுற்றுச்சுவா், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. இதற்கு சில பக்தர்கள் எதிா்ப்புத் தெரிவித்தனர். பின்னர், நெடுஞ்சாலை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினர்.
Similar News
News December 13, 2025
தி.மலை: முதலாளி வீட்டில் கைவரிசை காட்டியவர் கைது!

வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக் சசிகுமார் வீட்டில் வைத்திருந்த மகனின் திருமணத்திற்கான 13½ பவுன் நகை சேர்த்து வைத்திருந்தார். திடிரென்று நகை காணாமல் போனதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சந்தேகத்தின் பெயரில் கடை ஊழியரும், சசிகுமார் வீட்டில் தங்கி இருந்தவருமான அருண்குமாரை போலீசார் விசாரித்தனர்.இந்த விசாரணையில் அவர் நகையை திருடியது உறுதியானதால் அவரை போலீசார் கைது செய்தனர்.
News December 13, 2025
தி.மலை: நிலத்தகராற்றில் விவசாயி நாக்கு கடித்து அறுப்பு!

விநாயகபுரத்தை சேர்ந்த விவசாயி ஜோதிபிரகாஷ் தனது நிலத்தில் வரப்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர், நிலத்தகராறு காரணமாக ஜோதிபிரகாஷை மண்வெட்டியால் தாக்கி, அவரது நாக்கைக் கடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த ஜோதிபிரகாஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பெயரில் சங்கீதாவை கைது செய்தனர்.
News December 13, 2025
திருவண்ணாமலை: ஓசி பீடி குடுக்க மறுத்தவருக்கு பிளேடால் வெட்டு

ஆரணி அருகே கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கல்யாணசுந்தரம் அருணகிரிசத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்திருந்தார். அப்போது, சரவணயுவராஜ் பீடி கேட்டுள்ளார். கல்யாணசுந்தரம் ‘பீடி இல்லை’ என்று மறுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணயுவராஜ், தான் வைத்திருந்த பிளேடால் கல்யாணசுந்தரத்தின் முதுகில் வெட்டியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


