News April 3, 2025
திருவண்ணாமலையில் வெப்பநிலை அதிகரிக்கும்

தி.மலை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவ கூடும். இந்நிலையில், வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்கவும், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளவும், நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். *பாதுகாப்பா இருங்க மக்களே. நண்பர்களையும் எச்சரியுங்கள்*
Similar News
News September 17, 2025
சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் சமூக நீதி உறுதிமொழியை ஏற்றனர். அனைவரும் சமூக நீதியை நிலைநாட்டவும், சாதி, மத, இன பாகுபாடுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும் உறுதி பூண்டனர்.
News September 17, 2025
தி.மலையில் தீபாவளி பட்டாசு சில்லறை உரிமம் விண்ணப்பம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்ததாவது: இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு சில்லறை விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற விரும்புவோர், அக்டோபர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். பட்டாசு விற்பனையாளர்கள் தேவைப்படும் ஆவணங்களை இணைத்து சரியான நேரத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News September 17, 2025
வேங்கிக்காலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலை ஆட்சியர் க.தர்ப்பகராஜ், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று சான்றிதழ்களை வழங்கினார். திருவண்ணாமலை வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, ஆட்சியர் சாதி சான்றிதழ்களை நேரடியாக பள்ளித் தலைமையாசிரியர்களிடம் வழங்கினார்.