News March 19, 2024
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்தையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளையும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Similar News
News March 12, 2026
தி.மலை: G-PAYவில் சிலிண்டர் புக் செய்யலாம்!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 12, 2026
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சுவாமி தரிசனம்

புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோயிலில் தினந்தோறும் வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து பக்தர்களும், பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் நேற்று அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து, கிரிவலம் வந்தனர்.
News March 12, 2026
த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில், செய்யார் மற்றும் வந்தவாசி சட்டமன்ற நிர்வாகிகள் இணைந்து, திருவண்ணாமலை, அண்ணா சாலை அருகில் நாளை காலை 9 மணி அளவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த கோரியும் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களைத் தடுக்க தவறியதாக கூறி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.


