News August 9, 2024
திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
தி.மலை: இட்லி சாப்பிட்ட சிறுமி திடீர் மரணம்!

வெம்பாக்கம் தாலுகா பனமுகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு பிரனிதா (11) உள்ளிட்ட 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 23-ந்தேதி காலை வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், தாய், மகள்ககுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அனைவரும் வேலூரில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிரனிதா(11) பரிதாபமாக உயிரிழந்தார்.
News December 1, 2025
தி.மலை: தலைகுப்புற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!

கலசபாக்கம் வட்டம் தென் பள்ளிப்பட்டு அருகே சாலையில் வாகனத்தை முந்த முயன்ற ஆந்திரா காரின் மீது மோதாமல் இருக்க ஒதுங்கிய அரசு பேருந்து நிலை தடுமாறி சாலை ஓரம் கவிழ்ந்தது. பேருந்தில் பயணிகள் குறைவாக இருந்ததால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், பேருந்தை மீட்க வந்த கிரேனும் கவிழ்ந்ததால், கூடுதல் கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பேருந்தும் கிரேனும் மீட்கப்பட்டது.
News November 30, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (நவ.30) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


