News August 6, 2024

திருவண்ணாமலையில் கேரம் போட்டி

image

அடி அண்ணாமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் (ஆகஸ்ட் 8) திருவண்ணாமலை வட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் 14, 17, 19 ஆகிய வயது பிரிவுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். போட்டிகள் காலை 9:30 மணியளவில் துவங்கப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

Similar News

News November 16, 2025

தி.மலை: கடன் பிரச்னையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

image

செய்யாறு இளநீர் குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்னன் (26) தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவரிடம் கடன் வாங்கியதாகவும், கடனை திருப்பி செலுத்தாத நிலையில் பிரசாத் இவரை கடத்தி சென்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த கோகுலகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அனக்காவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 16, 2025

தி.மலை: நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் இயன்முறை மருத்துவர் (BPT) பணிக்கு தற்காலிக நியமன அடிப்படையில் 2 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சம்பளம் ரூ.13,000. நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும். தகுதியானவர்கள் 24.11.2025 க்குள் தேவையான ஆவணங்களுடன் சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

News November 16, 2025

தி.மலை: வெடிகுண்டு வெடித்ததில் சிறுவன் படுகாயம்!

image

செங்கம், மேல் நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (10) தாயுடன் கால்நடை மேய்ச்சலுக்கு நேற்று சென்றுள்ளார். அப்போது, காட்டுப்பன்றி வேட்டைக்காக மர்ம நபர்கள் வீசி சென்ற நாட்டு வெடிகுண்டை சிறுவன் எடுத்து பார்த்தபோது, குண்டு வெடித்ததில் உதட்டில் காயம் ஏற்பட்டது. சிறுவனுக்கு தி-மலை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜிப்மருக்கு மாற்றப்பட்டார்.

error: Content is protected !!