News August 7, 2024
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமியையொட்டி, கிரிவலம் செல்லும் நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.19 திங்கட்கிழமை அதிகாலை 2: 58 மணிக்கு முழுநிலவு ஆரம்பமாகி 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.02 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரங்களில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
திருவண்ணாமலை: ஓசி பீடி குடுக்க மறுத்தவருக்கு பிளேடால் வெட்டு

ஆரணி அருகே கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கல்யாணசுந்தரம் அருணகிரிசத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்திருந்தார். அப்போது, சரவணயுவராஜ் பீடி கேட்டுள்ளார். கல்யாணசுந்தரம் ‘பீடி இல்லை’ என்று மறுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணயுவராஜ், தான் வைத்திருந்த பிளேடால் கல்யாணசுந்தரத்தின் முதுகில் வெட்டியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News December 13, 2025
தி.மலை: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் (12.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.