News November 24, 2024
திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாகவும், நவம்பர் 25 முதல் 28 ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வரும் 27-ஆம் தேதி திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சென்னை, விழுப்புரம்,ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 11, 2025
தி.மலை: பரோடா வங்கியில் வேலை; பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள 417 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 24- 42 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.48,480 -ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப கல்வி தகுதி வரைமுறை செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு (ம) விண்ணப்பிக்க<
News August 11, 2025
திருவண்ணாமலையில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்

திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம், இன்று (ஆக.11) திங்கள் கிழமை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் 8,10,12ம் வகுப்பு பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் தொழிற்பயிற்சியில் சேர்ந்து 3 மாதம் முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சி பெறலாம். கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.apprenticeshipindia.govin பதிவு செய்து வரவும்.
News August 11, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு :

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக. 11) நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.