News August 8, 2024
திருவண்ணாமலையில் ஒரு வடை ரூ.28,000-க்கு ஏலம் போனது

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே துரிஞ்சிக்குப்பம் குளக்கரையில் ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடிபூரத்தையொட்டி நேற்று கொதிக்கும் எண்ணெய்யில் பக்தர்கள் வெறும் கையால் வடை எடுக்கும் வேண்டுதல் நடைபெற்றது. இவ்வாறு எடுக்கப்பட்ட வடைகளை குழந்தையில்லா தம்பதியினர் ஏலம் கேட்டனர். முதல் வடை ரூ.28,000-க்கும், 2-வது வடை ரூ.24,100-க்கும், 3-வது வடை ரூ.25,500-க்கும் ஏலம் போனது.
Similar News
News November 23, 2025
தி.மலை:இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (நவ.22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
தி.மலை: உங்க போன் தொலைஞ்சா- இத பண்ணுங்க!

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <
News November 22, 2025
தி.மலை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <


