News August 8, 2024
திருவண்ணாமலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழையே பெய்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 6 வட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
Similar News
News November 28, 2025
தி.மலை: திமுக சார்பில் பொதுக்கூட்டம் & நலத்திட்ட உதவிகள்

தி.மலை அடுத்த கீழ்நாத்தூரில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (நவ.28) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
News November 28, 2025
FLASH: தி.மலையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்ட டிசம்பர் 13 ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
தி.மலை: தீபத்துக்கு போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!

தி.மலை கார்த்திகை மகா தீபம் டிச.3ல் நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்நிலையில், அரசு பிரத்யேக மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், தற்காலிக பேருந்து நிறுத்தம், கார் பார்க்கிங், குடிநீர் வசதி, மருத்துவ முகாம், கழிவறைகள், ஆம்புலன்ஸ் வசதி எங்குள்ளது என தெரிந்துகொள்ளலாம். இந்த <


