News May 17, 2024
திருவண்ணாமலைக்கு 85 பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 23 ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் இருந்து ஆற்காடு, ஆரணி வழியாக 44 பேருந்துகள், தினசரி காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் கூடுதலாக 30 பேருந்துகள் என மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது.
Similar News
News September 17, 2025
சென்னை: புரட்டாசி முதல் நாள் இங்கே செல்லுங்கள்

கடன் தொல்லையை நீக்கும் கங்காதீசுவரர்: சென்னை புரசைவாக்கத்தில் பிரசித்திபெற்ற கங்காதீசுவரர் கோயில் உள்ளது. புரட்டாசி முதல் நாளான இன்று இங்கு வந்து தீபம் ஏற்றி வழிபட்டால் EMI உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைளும் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பியாக உள்ளது. மேலும், இறைவனை மனதார வேண்டினால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 17, 2025
JUST IN: சென்னை- பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக்குறைவால் இன்று (செப்.17) காலை நடிகர் ரோபோ சங்கர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் வேலை காரணமாக LOW B.P ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்அவருக்கு 2நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
News September 17, 2025
சென்னையில் மழை- மின் தடையா கவலை வேண்டாம்!

சென்னையில் மழை பெய்து வரும் நிலையில், மின்தடை ஏற்படும்போது, மின்னகம் (9498794987) எண்ணுக்கு கால் செய்து புகார் தெரிவிக்கலாம். அங்கு லைன் கிடைக்கவில்லை என்றால், சென்னை வடக்கு பகுதியில் வசிப்பவர்கள் 9444099255, மத்திய சென்னை பகுதியில் வசிப்பவர்கள் 9445850739, சென்னை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் 9498378194, சென்னை தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் 9150056672 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் அளிக்கலாம்.