News June 25, 2024

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 28ஆம் தேதி 265 பேருந்துகளும், ஜூன் 29ஆம் தேதி 320 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 1, 2025

தி.மலை : 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து டிச.14க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க.

News December 1, 2025

தி.மலை: இட்லி சாப்பிட்ட சிறுமி திடீர் மரணம்!

image

வெம்பாக்கம் தாலுகா பனமுகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு பிரனிதா (11) உள்ளிட்ட 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 23-ந்தேதி காலை வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், தாய், மகள்ககுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அனைவரும் வேலூரில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிரனிதா(11) பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 1, 2025

தி.மலை: தலைகுப்புற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!

image

கலசபாக்கம் வட்டம் தென் பள்ளிப்பட்டு அருகே சாலையில் வாகனத்தை முந்த முயன்ற ஆந்திரா காரின் மீது மோதாமல் இருக்க ஒதுங்கிய அரசு பேருந்து நிலை தடுமாறி சாலை ஓரம் கவிழ்ந்தது. பேருந்தில் பயணிகள் குறைவாக இருந்ததால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், பேருந்தை மீட்க வந்த கிரேனும் கவிழ்ந்ததால், கூடுதல் கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பேருந்தும் கிரேனும் மீட்கப்பட்டது.

error: Content is protected !!