News August 18, 2024
திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்

பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று முதல் ஆகஸ்ட் 20 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.கிளாம்பாக்கத்திலிருந்து நாளை 130 பேருந்துகளும், நாளை மறுநாள் 250 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. கோயம்பேட்டிலிருந்து நாளை 30 பேருந்துகளும், நாளை மறுநாள் 40 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. கிளம்பாக்கத்திலிருந்து 50 ஏசி பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
Similar News
News January 2, 2026
தி.மலை: பைக்கில் தடுமாறி விழுந்தவர் பலி!

செய்யாறு, உக்கல் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தீபன் (23) இவர் செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் டிச.21 ஆம் தேதி வேலைக்கு செல்ல பைக்கில் சென்ற போது, நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளார். சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 2, 2026
தி.மலையில் கரண்ட் கட்!

கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்பென்னாத்தூர், கரிக்கலாம்பாடி, கணியாம்பூண்டி, ராயம்பேட்டை, சிறுநாத்தூர், மேக்களூர், நல்லான்பிள்ளைப்பெற்றாள், சோமாசிபாடி, கடம்பை, சோ.காட்டுகுளம், ஆராஞ்சி, காட்டுவேளானந்தல் & அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மிதடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News January 2, 2026
தி.மலை: இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (01.01.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


