News August 18, 2024

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு இன்று மற்றும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 130 பேருந்துகளும், நாளை 250 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து இன்று 30 பேருந்துகளும், நாளை மாதாவரத்திலிருந்து 40 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். குறிப்பாக கிளாம்பாக்கத்தில் இருந்து படுக்கை வசதி கொண்ட 50 ஏசி பேருந்துகள் நாளை இயக்கப்படும். www.tnstc.in

Similar News

News November 4, 2025

சென்னை: தறிகெட்டு ஓடிய கார்; தொம்சம் செய்த மக்கள்

image

சென்னை ஈசிஆர் சாலையில் நேற்று புல்லட் மீது அதிவேகமாக சென்ற பென்ஸ் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்தார். காரில் சென்ற 2 இளைஞர்களும் மது போதையில் இருந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இளைஞர்களை பிடித்து தர்மஅடி கொடுத்து காரை அடித்து நெருக்கினர். தகவலறிந்த போலீசார் இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News November 4, 2025

சென்னை: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் நேற்று (3.11.25) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 4, 2025

நாளை பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

image

பத்தாம் வகுப்பு 12 வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை நாளை( 4-11-2025) காலை 10.30 மணியளவில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார் ஏப்ரல் மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி முன்கூட்டியே தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!