News March 22, 2024
திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

தி.மலை பங்குனி மாத பவுர்ணமி அன்று பங்கு உத்திரமும் வருகிறது. இதனால், கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதுபோல திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வோரின் அதிகரிக்கும். எண்ணிக்கையும் இதையொட்டி, தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. பவுர்ணமி மற்றும் உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News April 7, 2025
தி.மலையை 2ஆக பிரிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

தி.மலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கக் கோரி அண்ணா சிலை முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிலேயே நிலப்பரப்பில் 2-வது பெரிய மாவட்டமாக தி.மலை உள்ளது. இந்த மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் மக்கள் உள்ளனர். 8 சட்டபேரவை தொகுதிகள் உள்ள தி.மலையை 4 தொகுதிகள் வீதம், 2 மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று கூறினார். உங்கள் கருத்து என்ன?.
News April 7, 2025
அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலையில் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 42 அங்கன்வாடி பணியிடங்கள், 04 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 47 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் தேதிக்குள் <
News April 7, 2025
இளம்பெண்ணை கடத்திய சென்னை போலீஸ்காரர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி மகளான 24 வயது இளம்பெண், எம்.ஏ. பட்டதாரி. இவர் கடந்த 3ஆம் தேதி இரவு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை போலீசில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) புகார் கொடுத்தார். அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த சென்னையில் போலீசாக பணிபுரியும் ரவிச்சந்திரன் (34) என்பவர் அப்பெண்ணை கடத்திச் சென்று இருக்கலாம் என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.