News August 17, 2024
திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்பி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் வழிநின்று சமத்துவம் – சகோதரத்துவம் – சமூகநீதி காப்பதற்காக சமரசமின்றி பயணித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
ஓய்வூதியதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது உயிர் வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால் காரர்கள் மூலம் சமர்ப்பிக்க தபால் துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே ஓய்வூதியம் வாங்கும் ஓய்வூதியதாரர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
News November 8, 2025
தூத்துக்குடி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
News November 8, 2025
தூத்துக்குடி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வழி

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


