News August 14, 2024

திருமாவளவனிடம் துண்டறிக்கை வழங்கிய மாநகர செயலாளர்

image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாநகர் மாவட்டம் சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கடலூரில் நடைபெற உள்ளது. இந்த விழிப்புணர்வு பேரணி தொடர்பான துண்டறிக்கையை, வி.சி.க மாநகர செயலாளர் செந்தில், வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் இன்று வழங்கினார்.

Similar News

News October 24, 2025

கடலூர்: பாம்பு கடித்து பெண் பலி

image

வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் கலா என்கிற கலைச்செல்வி(57). இவர் அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது இடது காலில் பாம்பு கடித்தது. பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலா நேற்று (அக்.23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 24, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.24) இரவு 10 மணி முதல் இன்று (அக்.24) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News October 23, 2025

கடலூர்: மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

காவேரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு 60,000 கன அடி வரை அதிகரிக்கக்கூடும். எனவே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் (அக்.23) இரவு வெளியிட்டுள்ள செய்தி குறித்து தெரிவித்துளார்.

error: Content is protected !!