News March 25, 2025
திருமானூர் அருகே பைக் மோதி வாலிபர் பலி

திருமானூர் அடுத்த அன்னிமங்கலம் அசோக் நகரைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டரான கோபிநாத், நேற்று காலை தனது நண்பருடன் பைக்கில் புள்ளம்பாடி- திருமானூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பாக்கியநாதபுரம் கல்லறை தோட்டம் அருகே, சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த கோபிநாத், சம்பவ இடத்திலேயே உயிர்ழந்தார். இதுகுறித்து வெங்கனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
அரியலூர்: இளைஞர் மீது குண்டர் சட்டம்

அரியலூர், கீழப்பழுவூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், இவர் கடந்த 06-ம் தேதி பாலியல் வன்கொடுமை குற்ற வழக்கில் கீழப்பழுவூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் இவர் மீது பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை போன்ற குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
News November 24, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.23) இரவு 10 மணி முதல் இன்று (நவ.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!