News August 14, 2024

திருமானுரில் மனைவியை எரித்து கொன்ற கணவர்

image

திருமானூரை அடுத்த வெங்கனூா் கிராமத்தை சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மகன் சுரேஷ்குமாா் (36). இவரது மனைவி அனிதா(28).இருவருக்கும் குடும்பப் பிரச்சனை காரணமாக சண்டை நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த (5.11.2021) அனிதாவின் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி சுரேஷ்குமாா் தீ வைத்தாா். இதில், பலத்த காயமடைந்த அனிதா உயிரிழந்தாா். இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மகளிர் நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

Similar News

News December 4, 2025

அரியலூர்: மின் தடை அறிவிப்பு

image

அரியலூர், மாவட்டம் நடுவலூர் மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கோட்டியால், வெண்மணிக்கொண்டான், உள்ளிட்ட பகுதிகளுக்கு (டிச.5) நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மாதாந்திர பாராமரிப்பு காரணமாக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என நடுவலூர் துணை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

அரியலூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

அரியலூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு <<>>க்ளிக் செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 4, 2025

அரியலூர் மாவட்டத்தின் மழையின் அளவு

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று மிதமான மழை பெய்தது. இதனை ஒட்டி அரியலூரில் 6.2 மி.மீ, திருமானூரில் 8.2 மி.மீ, ஜெயங்கொண்டத்தில் 16.4 மி.மீ செந்துறையில் 5.2 மி.மீட்டரும், ஆண்டிமடத்தில் 2.8 மி.மீட்டரும், சித்தமல்லி டேமில் 4 மி.மீட்டரும், குருவாடியில் 13 மிமீட்டரும், தா.பழூரில் 3 மி.மீ மழை பெய்துள்ளது. அதன்படி மாவட்டத்தின் மொத்தமாக 58.8 மில்லிமீட்டர் மழை பதிவாதியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!