News January 22, 2025

திருமயம் ஜகபர் அலி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்

image

திருமயம் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதுகை எஸ்.பி அபிஷேக்குமார் பரிந்துரையின் பேரில் டிஜிபி சங்கர் ஜிவால் மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருமயம் அருகே கனிமவள கொள்கைக்கு எதிராக போராடியவர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Similar News

News November 26, 2025

JUST IN புதுக்கோட்டை: கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணு

News November 26, 2025

புதுகை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

image

கார்த்திகை தீபம் விழா அடுத்த மாதம் டிச.3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக திருநெல்வேலி – திருவண்ணாமலை சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 26, 2025

புதுவை: மக்கள் தொடர்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

image

ஆலங்குடி தாலுகா குழந்தை விநாயகர் வருவாய் கிராமத்தில் வருகிற டிச.10 ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் இன்று முதல் தங்களது கோரிக்கை மனுக்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!