News October 23, 2024

திருமயத்தைச் சேர்ந்த 12 பேர் மாநில போட்டிக்குத் தேர்வு

image

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பயிற்றுனர் அப்துல் காதர் பயிற்றுவித்த திருமயம் மாணவர்கள், 12 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை பெற்றுள்ளனர். முதலிடம் பிடித்தவர்கள் 12 பேரும் மாநிலப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க வருகின்றனர். ஷேர் செய்யவும்

Similar News

News December 19, 2025

புதுகை மாவட்ட கலெக்டர் ஆய்வு

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறை அமைந்துள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று (டிச.18) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுகை: கோயிலுக்கு சென்ற கார் விபத்து – 4 பேர் படுகாயம்!

image

பட்டுக்கோட்டையை சேர்ந்த கார்த்திக் (35), சதீஷ் (29), பாலசுப்பிரமணியன் (30), கார்த்திகை செல்வன் (25) ஆகியோர் சதுரகிரிக்கு ஒரு காரில் சென்றனர். இந்நிலையில் பட்டுக்கோட்டை சாலையில் அம்புலி ஆற்று பாலத்தில் கார் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதியது. இதில் சென்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

error: Content is protected !!