News April 12, 2025
திருமண வரம் தரும் மயூரநாதர் கோயில்

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி இன்று. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பனப்பாக்கத்தில் அமைந்துள்ளது மயூரநாதர் கோயில். அகத்தியருக்கு கைலாய மலையில் இருந்து சிவன் திருமண காட்சியை அருளிய தலம் என்பதால், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து மயூரநாதரை வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. திருமண வரன் பார்த்துக்கொண்டிருக்கும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க..
Similar News
News November 15, 2025
ராணிப்பேட்டை: சம்பளம் வரலையா..? உடனே CALL!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 15, 2025
ராணிப்பேட்டை: பச்சிளம் குழந்தை பரிதாப பலி!

திமிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேட்டுக்குடி வாசல் கிராமத்தை சேர்ந்த அஜித் சினேகா தம்பதிகளுக்கு கடந்த திங்கள் அன்று பிறந்த ஆண் குழந்தைக்கு பிரசவத்தின் போது தொப்புள் கொடி கழுத்தைக் சுற்றியதால் சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இன்குபேட்டர் இல்லாததாலும், போதிய மருத்துவர் செவிலியர்கள் இல்லாததாலும் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
News November 15, 2025
ராணிப்பேட்டையில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் துணை மின் நிலையம், அரக்கோணம் துணை மின் நிலையத்தில் இன்று (நவ.15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அரக்கோணம் நகரம், ஹவுசிங் போர்டு, அசோக் நகர், மோசூர் ரோடு, வின்டார்பேட்டை, சோளிங்கர் நகரம், கொண்டபாளையம், கல்பட்டு, சோமமுத்திரம், கீழ் பாலபுரம், சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு.


