News April 29, 2025
திருமண தடை நீங்க வேண்டுமா? இங்கே வாங்க

குலசேகரப்பட்டினத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலில், தலவிருட்சம் மாமரத்தின் கீழே மாவடி அம்மன் சிலை உள்ளது. அம்மனை குழந்தை பாக்கியம் இல்லாதோர் மாங்கனிகளை படைத்து வழிபாடு செய்வார்கள். அதேபோல் திருமண தடை உள்ளவர்கள் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு செய்து வளையல் படைத்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.
Similar News
News September 18, 2025
சாத்தான்குளம் அருகே வாலிபர் தற்கொலை

சாத்தான்குளம் அருகே உள்ள பழங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜோஸ்வா லாரன்ஸ் (19) என்ற வாலிபர் கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அவர் இன்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மெய்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 17, 2025
BREAKING தூத்துக்குடி துறைமுகத்தில் 3 பேர் பலி

தூத்துக்குடியில் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை கப்பலில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கி ராஜஸ்தானை சேர்ந்த சந்திப் குமார், தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலை சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லை மாவட்டம் உவரி பகுதியைச் சேர்ந்த சிரோன் ஜார்ஜ் ஆகிய 3 பேர் விஷவாயு தாக்கி மூச்சு திணறி உயிரிழந்தனர். உடலை கைப்பற்றி மத்திய பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 17, 2025
தூத்துக்குடி வீரர்களே., அழைப்பு உங்களுக்கு தான்!

தூத்துக்குடி மக்களே, தென்னக ரயில்வேயில் விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளுக்கு Level 1 முதல் 5 பணியிடங்களுக்கு 67 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10வது முடித்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் அக். 12க்குள் <