News April 24, 2025

திருமண தடை நீக்கும் குடைவரை கோயில்

image

செங்கல்பட்டு மாவட்டம் வல்லத்தில் வேதாந்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. எங்கெல்லாம் முதிர்ந்த பாறைகள் உள்ளதோ அங்கெல்லாம் கல்குடைந்து கோவில் கட்டிய பல்லவர்கள் இதையும் குடைவரை கோயிலாக காட்டியுள்ளனர். சூரிய கதிர்கள் நேரடியாக கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழும் வகையில் கட்டப்பட்ட இந்த கோயிலில் வந்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

Similar News

News April 25, 2025

பாலியல் வன்கொமைக்கு ஆளான மாணவி உயிரிழப்பு

image

வண்டலூர் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகழக மாணவியை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்ததாக உதவிய பேராசிரியர் ராஜேஷ்குமார் (45) சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கருக்கலைப்பின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்குச் சென்ற கல்லூரி மாணவி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News April 24, 2025

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மனுதாரர்கள் ஜூன் 10ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணுங்க

News April 24, 2025

இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

image

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!