News April 21, 2025

திருமண தடை நீக்கும் அற்புத கோவில்

image

திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News October 18, 2025

திண்டுக்கல் பிரபல ரவுடி கூட்டாளி திடீர் மரணம்..!

image

மதுரையைச் சேர்ந்த தி.மு.க பிரமுகரை கடத்தி வழக்கில் கைதாகி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி வர்க்கீஸ் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே வர்க்கீஸ் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News October 18, 2025

திண்டுக்கல்லில் நாய் மோதியதால் நேர்ந்த விபரீதம்!

image

திண்டுக்கல் அய்யலூர், பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் அப்பாச்சாமி (வயது 60). இவர், கடந்த 15-ம் தேதி தனது டூவிலரில் அதே பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீரென ஒரு நாய் குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார் அப்பாச்சாமி ,சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்துச் சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை

News October 18, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ரோந்து விவரம்

image

திண்டுக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுப்புறமான ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள தேவையான உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் புகார் இருந்தால் அதிகாரிகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!