News March 24, 2025
திருமணமான தம்பதிகள் ஒற்றுமையாக வாழ

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஆதிகாமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8.30 மணி வரையும் திறந்திருக்கும். இங்கு வந்து வேண்டினால் திருமணத்தடை நீங்கும், திருமணமான தம்பதிகள் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக வாழ்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 4, 2025
காஞ்சி: செய்யாற்றில் சிக்கி விவசாயி பலி!

காஞ்சி: இளையனர் வேலூர் பிள்ளையார் கோவில்க் தெருவைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரன்(37). விவசாயக் கூலியான இவர், நேற்று(நவ.3) காலை 10:30 மணியளவில் செய்யாறு ஆற்றைக் கடக்க முயன்றபோது நிலை தடுமாறிய அவர், நீரில் மூழ்கி பலியானார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மாகரல் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
News November 4, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர். 03) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
காஞ்சிபுரம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் நவ.4 முதல் நவ. 25 வரை வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெறவுள்ளது. டிசம்பர் 9 வரை வாக்காளர் பட்டியல், டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 வரை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் திருத்தல் முகாம் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.


