News April 2, 2025
திருமணத் தடை நீங்க இந்த கோயிலுக்கு போங்க.!

சிவகங்கை பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் சிவகங்கையில் ஒரு கோயில் எழுப்பி அந்த கோயிலுக்கு சசிவர்ணேஸ்வரர் கோயில் என பெயர் சூட்டினார். இந்த கோயிலில் உள்ள துர்க்கையம்மன் இடது காலை மடித்து, காலுக்கு கீழே அசுரனை கிடத்திய நிலையில் காட்சி அளிக்கும். இந்த ஆலயத்தில் சுகப்பிரசவமாக, திருமணத் தடை நீங்க, மாதவிடாய் போன்ற பிரச்னைகளுக்கு துர்க்கையம்மனிடம் வேண்டினால் அது நடக்கும் என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.
Similar News
News October 14, 2025
காரைக்குடி: ஓய்வூதியத்தில் இருந்து பயிற்சி மையம்

காரைக்குடி அருகே பள்ளத்தூரைச் சேர்ந்த பி. பரமசிவம், பணி ஓய்வு பெற்ற மாற்றுத் திறனாளியான இவர், கிராமப்புற இளைஞர்களுக்காக தனது சொந்த ஊரான பள்ளத்தூரில் வாடகைக் கட்டிடத்தில் திறன் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இதற்காக தான் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்திலிருந்து ரூ.30 லட்சம் செலவழித்துள்ளார். அங்கு பணிபுரியும் 5 பயிற்சியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் இருந்து ஊதியம் வழங்குகிறார்.
News October 13, 2025
காரைக்குடியில் விமானப் பயிற்சி மையம்

தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உற்பத்தி மற்றும் முதலீட்டில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உயர முயற்சித்து வருகிறது. இதற்காக பாதுகாப்புத் தொழில் வழித்தடத் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் காரைக்குடி & கோவில்பட்டியில் விமானப் பயிற்சி மையம் (Flight Training Centre) அமைக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் டி. ஆர். பி. ராஜா தெரிவித்துள்ளார்.
News October 13, 2025
சிவகங்கை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989